-
Rs.2,634.00
நான் மனம் பேசுகிறேன் / Naan manam pesukiren
மனத்தைப் புரிந்து கொள்ளவும் அதன் மர்மங்களைத் திரைவிலக்கவும் யார்தான் விரும்ப மாட்டார்கள்? ஏனெனில், மனம்தான் ஒரு மனிதனை இருபத்து நான்கு மணிநேரமும் கட்டுப்படுத்துகிறது. மனத்தின் சக்திக்கு எதிராகப் போகும்போது மனிதர்கள் செயலற்றுப் போகின்றனர். ஆனால், தங்களுடைய மனத்தை வெற்றி கொண்டுள்ள அறிவார்ந்த நபர்கள் மகிழ்ச்சி மற்றும் வெற்றியை அபரிமிதமாகக் கைவசப்படுத்தியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, அத்தகையோர் வெகுசிலரே உள்ளனர். இந்நூலின் ஆசிரியரான தீப் திரிவேதி ஒரே ஒரு நோக்கத்துடன்தான் இந்நூலை எழுதியுள்ளார். தங்களுடைய மனங்களை வெற்றி கொண்டுள்ளோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அதன் மூலமாக இவ்வுலகில் மகிழ்ச்சி மற்றும் வெற்றியைக் கைவசப்படுத்தியுள்ளோரின் சதவீதத்தை அதிகரிப்பதும்தான் அது. மனம் ஓர் எளிய விதியைப் பின்பற்றுகிறது: ‘மனம் உங்களை வெற்றி கொண்டுள்ளது என்றால், அது உங்கள் வாழ்வில் பேரழிவுகளை ஏற்படுத்தும். நீங்கள் உங்கள் மனத்தின் எஜமானாக ஆனால், அதே மனம் ஓர் அசாதாரணமான சக்தி மையமாக மாறும்.’இப்புத்தகத்தில் கையாளப்பட்டுள்ள தலைப்புகளில் இவையும் அடங்கும்: மனத்திற்கும் மூளைக்கும் இடையேயான ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் மனத்தின் பல்வேறு நிலைகள் மனத்தின் அதிகார மையங்கள் வெற்றிக்கான திறவுகோல்கள் மேதமைக்கும் அறிவாற்றலுக்கும் இடையேயான வேறுபாடுகள்.
-
Rs.3,294.00
பிறரிடம் சகஜமாகப் பேசுவது எப்படி / Piraridam sakajamakap pesuvathu eppadi ?
வாழ்க்கையில் எல்லாவற்றையும் கைவசப்படுத்தியுள்ள வெற்றியாளர்களைக் கண்டு, அது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது என்று நீங்கள் வியந்ததுண்டா? வணிகக் கூட்டங்களாகட்டும், சிறு சந்திப்புக்கூட்டங்களாகட்டும், அங்கு அவர்கள் அனைவருடனும் தன்னம்பிக்கையுடன் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போன்ற நபர்கள்தாம் நல்ல வேலைகளையும், சிறப்பான வாழ்க்கைத் துணைவர்களையும், சுவாரசியமான நண்பர்களையும் பெற்றிருக்கின்றனர். அவர்கள் உங்களைவிட அதிக சாமர்த்தியமானவர்களாகவோ அல்லது அதிக வசீகரமானவர்களாகவோ இருப்பதால் அவர்கள் வெற்றியாளர்களாக இருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டியதில்லை. பிறருடன் கலந்துரையாடுவதற்கும், அவர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்குமான அதிக ஆற்றல்மிக்க ஒரு வழியை அவர்கள் அறிந்துள்ளனர், அவ்வளவுதான். இந்நூலில் இடம்பெற்றுள்ள உத்திகளில் இவையும் அடங்கும்: • எடுத்த எடுப்பிலேயே உங்களைப் பற்றிய ஒரு சிறந்த அபிப்பிராயத்தைப் பிறரிடம் தோற்றுவிப்பது எப்படி? • எந்தவொரு கூட்டத்திலும், அக்கூட்டம் தொடர்பான விஷய ஞானம் உங்களிடம் இருப்பதாகக் காட்டிக் கொள்வது எப்படி? • உரையாடல்களின்போது எப்போது பிறருடைய அகங்காரத்திற்குத் தீனி போட வேண்டும், எப்போது போடக்கூடாது என்பதை அறிந்து கொள்வது எப்படி? • உங்களுடைய அலைபேசியை ஒரு சிறந்த கருத்துப் பரிமாற்றக் கருவியாகப் பயன்படுத்துவது எப்படி? • உங்கள் முன் இருப்பவர்களை, கைதேர்ந்த ஓர் அரசியல்வாதியைப்போல உங்களுடைய பேச்சால் கட்டிப்போடுவது எப்படி?
-
Rs.2,970.00
நல்ல அதிர்வுகள் நல்ல வாழ்க்கை / Nalla athirvu Nalla vaalkkai
உங்களை நீங்களே உண்மையாக நேசிக்க எவ்வாறு கற்றுக் கொள்வது? எதிர்மறையான உணர்ச்சிகளை நேர்மறையான உணர்ச்சிகளாக எவ்வாறு மாற்றுவது? நிரந்தரமான மகிழ்ச்சியைக் கண்டுகொள்வது உண்மையிலேயே சாத்தியமா? இன்ஸ்டாகிராமில் வெற்றிகரமாக வலம் வருகின்ற வெக்ஸ் கிங், மேற்குறிப்பிடப்பட்டுள்ள கேணீநீள்விகளுக்கும் இன்னும் அதிகமானவற்றுக்கும் இந்நூலில் விடையளிக்கிறார். பாதகமான சூழல்களிலிருந்து மீண்டு வந்து, இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கைக்கான ஒரு மூலாதாரமாக விளங்குகின்ற அவர், தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களையும் தன்னுடைய உள்ளார்ந்த புரிதலையும் கொண்டு உங்களுக்கு உத்வேகமூட்ட வந்துள்ளார். நீங்கள் சிந்திக்கின்ற, உணர்கின்ற, பேசுகின்ற மற்றும் நடந்து கொள்கின்ற விதத்தை நீங்கள் மாற்றும்போது, நீங்கள் இவ்வுலகத்தை மாற்றத் தொடங்குகிறீர்கள் என்பதை வெக்ஸ் கிங் இந்நூலில் உங்களுக்குக் காட்டுகிறார்.