-
Rs.3,300.00
மகா கவிதை / Maha kavidhai
கவிப்பேரரசு வைரமுத்துவின் 39 ஆவது படைப்பு 2024 புத்தாண்டின் முதல் நாளில் வெளிவந்துவிட்டது.
‘மகா கவிதை’ – புவியைக் காக்க தமிழ்நாட்டிலிருந்து ஓங்கி ஒலித்திருக்கும் உலக இலக்கியம் ‘.
படைப்பாளன் பெருங்கவிஞன்;
இலக்கிய வடிவங்கள் அத்தனையிலும் வித்தகன்;
சமூக அக்கறை மிக்கவன்;
இயற்கையின் காதலன்;
வான் புகழ் கொண்டவன்.
பஞ்சபூதங்களின் தகவல்களை – ரகசியங்களை – அறிவியல் செய்திகளைச் சுருக்கமாகவும் சொல்ல வேண்டும்; சுவையாகவும் செப்ப வேண்டும். -
Rs.1,650.00
தண்ணீர் தேசம் – Thanneer Desam
கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள் இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப் பட்டுள்ளன.
எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரே வழி உலக உயரத்திற்கு மொழியை உயர்த்திப் பிடிப்பதுதான். வாழ்வியல் மாற்றங்களை எல்லாம் உண்டு செரிக்கும் வயிற்றை மொழிக்கு உண்டாக்குவதுதான். அந்தச் சமுத்திர முயற்சியின் ஒரு துளிதான் இந்தத் ”தண்ணீர் தேசம்” கடலியலை இலக்கியப்படுத்தும் ஒரு பிள்ளை முயற்சி
-
Rs.2,640.00
கருவாச்சி காவியம் / Karuvaachi Kaviyam
இந்நாவலின் வாசிப்பின்போது வைரமுத்துவின் கருவாச்சியை நினைவு வருவதை உணரலாம். ஒரு பெண் தனித்து வாழும்போது சமூகம் அவளுக்கு கொடுக்கும் இன்னல்கள், குறைந்தது மூன்று ஆண் கதாபாத்திரங்க ள் முதல் ஊரே அவளுக்கு எதிராகவும் பல இன்னல்களும் கொடுக்கும். அதையெல்லாம் சமாளித்து பின் ஊர் உணரும் புண்ணியவதி ஆவாள் கருவாச்சி.தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது.’கள்ளிக்காட்டு இதிகாசம்’ ‘கருவாச்சி காவியம்’ இரண்டும் என்னளவில் இரட்டைக்காப்பியங்கள் என்றுதான் என் இதயம் வலித்துக்கொண்டே நினைக்கின்றது
-
Rs.2,310.00
கள்ளிக்காட்டு இதிகாசம்
கடைசி அத்தியாயம் எழுதி முடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில் நீரொழுக நீரொழுக நினைத்துக் கிடந்தேன்.பிறந்த மண்ணுக்கும், வாழ்க்கையும் வட்டார வழக்கும் சொல்லிக் கொடுத்த மக்களுக்கும் நான் காட்டும் நன்றி என்று சொல்லலாம் இந்த நாவலை.