-
Rs.1,188.00
கீழடி முதல் ஈழம் வரை – Keezhadi Mudhal Eezham Varai
இந்தத் தொகுப்பு திருகோணமலை மாவட்டத்தின் தொன்மைமிகு தமிழக் கிராமங்களைப் பற்றிப் பேசுகிறது. அங்கு மறந்து கிடைக்கும் வரலாற்றுப் பழமையைச் சொல்லிச் செல்கிறது.ஈழத் தமிழர்களது வரலாறு தமிழ்நாட்டைப்போலவே தொன்மையான வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டது. இன்று கீழடி, பொருநை நாகரிகங்கள் பற்றி அதிகமாகவே பேசப்படுவதை அறிவோம். தொல்லியல் அகழ்வுகளும் அது வழியிலான கண்டுபிடிப்புகளும், இந்திய வரலாற்றை மாற்றி எழுதவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளன. வைகைக்கரை நாகரிகம், காவிரிக்கரை நாகரிகம், பொருநை வழிவருகிற நாகரிகம் என ஆற்றோர நாகரிக பண்பாட்டைப் பேசுகின்றன. இதுபோல ஈழத்திலும் மாவலி கங்கை வழி விரியும் நாகரிகத் தடங்கள் ஈழத்தமிழர் தொல்லியல் பழமையைச் சொல்கின்றன