1Products found
Filter
-
Rs.2,640.00
என் கொல்லை புறத்துக்காதலிகள் / En kollaipurathu kathalikal
ஊரில் நம் எல்லோர் வீட்டிலுமே
கொல்லைப்புறம் இருக்கிறது.அம்மிக்கல்லு, நாய்க்குட்டி,
ஈரச்சாக்கு, விறகுக்கட்டை
என்று நாம் மட்டுமே அறிந்த கொல்லைப்புறம்.
நம் நினைவுகளும் அப்படியே.
ஐஞ்சாம் வகுப்பு ராதிகா, பங்கர்,
நல்லூர்க்கந்தன், ஒழுங்கைக் கிரிக்கட்,
பிரேமதாசா போட்ட பீக்குண்டு என அத்தனையும்
நம் பிரத்தியேகக் கொல்லைப்புறத்துக் காதலிகளே.சில காதலிகளை நினைக்கையில் ஏக்கம் வரும்.
சில பெயர்கள் புன்னகையை வரவழைக்கும்.
ஊருக்குத் திரும்புகையில் மனம்
அவர்களையே தேடி ஓடும்.
பேசினவற்றை மீட்டிப்பார்க்கும்.
பேச மறந்தவற்றைப் பேசி முடிக்கும்.
சிலதுக்குச் செவிட்டைப்பொத்தி
அறையவேணும்போலவும் தோன்றும்.
சிலது நமக்கு அறையும்!‘என் கொல்லைப்புறத்துக் காதலிகள்’
இவர்களை முத்தமிட நெருங்கையில்
கன்னத்தில் இன்னமும் காயாத ஈரம்.
வேறொன்றுமில்லை – அதுவே
நாம் வாழ்ந்த வாழ்க்கையின் சாரம்