-
Rs.1,974.00
PERSONAL SUCCESS
-
Rs.1,314.00
படைப்பாற்றலும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் / Padippattralum pirachchinaikalukkuth theervu kaanunkal
வேலைச் சூழல்களில் தோன்றுகின்ற சவால்களுக்குப் படைப்பாற்றல்ரீதியான தீர்வுகளைக் கண்டுபிடிக்கின்ற திறமைதான் ஓர் அசாதாரணமான தொழில் வாழ்க்கைக்கான முத்திரையாகும். உங்களுடைய வேலையில் நீங்கள் முன்னேறுவதற்குப் படைப்பாற்றல்ரீதியாகச் சிந்திக்கின்ற திறன் இன்றியமையாதது. உலகின் தலைசிறந்த வெற்றியாளர்களில் ஒருவரான பிரையன் டிரேசி, உதவிகரமான கருவிகள் கிடைத்தால் எவரொருவராலும் படைப்பாற்றலை மேலும் வளர்த்துக் கொள்ள முடியும் என்று கருதுகிறார். படைப்பாற்றல்மிக்க யோசனைகளை ஊற்றெடுக்க வைக்கின்ற 21 நிரூபணமான உத்திகளை பிரையன் இந்நூலில் வெளிப்படுத்துகிறார். இந்நூலிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளக்கூடிய முக்கியமான விஷயங்களில் கீழ்க்கண்டவையும் அடங்கும்: • படைப்பாற்றலைத் தூண்டுகின்ற மூன்று காரணிகளை முடுக்கிவிடுவது எப்படி • உங்களுடைய ஊழியர்கள் தங்களிடம் படைப்பாற்றல் மனப்போக்கை உருவாக்கிக் கொள்ள உங்களால் எப்படி உதவ முடியும் • நேர்த்தியான தீர்வுகளை உருவாக்குவதற்கு எந்த மாதிரியான கேள்விகளைக் கேட்க வேண்டும் • இயந்திரத்தனமான சிந்தனைக்கும் மறைமுகப் படைப்பாற்றல் சிந்தனைக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் என்னென்ன • படைப்பாற்றல் தூண்டுதலை அடக்கிவிடாமல் புதிய யோசனைகளைத் தீவிரமாக மதிப்பிடுவது எப்படி உங்களுக்குள் பொதிந்திருக்கும் உள்ளுணர்வுரீதியான மேதைமையை வெளிக் கொண்டுவர, உங்களுடைய தொழில் வாழ்க்கையைப் புரட்டிப் போடக்கூடிய இந்நூலைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
-
Rs.1,974.00
முத்தமிடுவீர் அந்தத் தவளையை / முத்தமிடுவீர் அந்தத் தவளையை
‘தவளையும் இளவரசியும்’ என்ற சிறுவர் புனைகதையில் வருகின்ற இளவரசி, எப்படி அந்த அசிங்கமான தவளையை முத்தமிட்டு அதை ஓர் அழகான இளவரசனாக மாற்றத் தயங்கினாளோ, அதுபோலவே, நம்முடைய கனவுகள் மெய்ப்படுவதை நம்முடைய தயக்கத்தால் நாமே தடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் எவற்றையெல்லாம் அடைவதற்கான திறமை பெற்றுள்ளோமோ, அவற்றை அடைவதிலிருந்து, நம்முடைய எதிர்மறை எண்ணங்களும் உணர்வுகளும் மனப்போக்குகளும் நம்மைத் தடுத்துக் கொண்டிருக்கின்றன. பல வெற்றிப் படைப்புகளுக்குச் சொந்தக்காரரான பிரையன் டிரேசி, தன் மகளும் உளவியல் ஆலோசகருமான கிறிஸ்டினா டிரேசி ஸ்டைனுடன் சேர்ந்து எழுதியுள்ள இந்நூலில் கூறப்பட்டுள்ள, ஆற்றல் வாய்ந்த பல உத்திகளும் பயிற்சிகளும், நீங்கள் எதிர்கொள்கின்ற அனுபவங்கள் முதலில் எவ்வளவு சவாலானவையாகத் தோன்றினாலும்கூட அவை ஒவ்வொன்றிலிருந்தும் பயனுள்ளவற்றைக் கண்டறியக்கூடிய விதத்தில் நீங்கள் உங்களுடைய மனப்போக்கை மாற்றிக் கொள்ள உங்களுக்கு உதவும். அசைக்கப்பட முடியாத தன்னம்பிக்கையை உருவாக்கிக் கொள்வதற்கும், உங்களுடைய மிகச் சிறந்த வடிவமாக நீங்கள் உருவெடுப்பதற்கும், ஓர் அசாதாரணமான வாழ்க்கையை வாழத் தொடங்குவதற்கும் தேவையான அனைத்தையும் இந்நூலிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்வீர்கள் என்பது உறுதி.